ஐபிஎல் உடன் மோத நினைத்த பிஎஸ்எல் ஏலத்தில் பண பலத்தில் இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்
February 13, 2026

லாகூரில் முதன்முறையாக நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் ஏலத்தில் வீரர்களுக்கான விலை நிர்ணயம் ஐபிஎல் தொடருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக நசீம் ஷா சுமார் 2.8 கோடி இந்திய ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ஐபிஎல் தொடரில் ஒரு சாதாரண வீரரின் அடிப்படை விலைக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடி ஒப்பந்தத்தில் ஸ்டீவ் ஸ்மித் 4.53 கோடி இந்திய ரூபாய் பெற்றாலும் ரிஷப் பந்தின் 27 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது அது மிகச்சிறிய தொகையாகும். பிஎஸ்எல் தொடரின் ஒரு அணியின் முழு பட்ஜெட்டே ஐபிஎல் வீரரின் விலையை விட குறைவாக உள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் கிரிக்கெட் பொருளாதாரத்தில் ஐபிஎல் தொடருக்கும் பிஎஸ்எல் தொடருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.