ஏப்ரல் 1 முதல் உயர்கிறது ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் வாகன ஓட்டிகளே உஷார்
March 15, 2026

இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) வரும் ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி, 2026-27 நிதியாண்டிற்கான கட்டணம் 3,000 ரூபாயிலிருந்து 3,075 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு தனிநபர் பயன்பாட்டிற்கான கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஓராண்டிற்கு அல்லது 200 பயணங்களுக்குச் சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தற்போது நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் இத்திட்டத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த சிறு கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நெடுஞ்சாலைகளில் விரைவான பயணத்தை உறுதி செய்ய இந்த வருடாந்திர பாஸ் முறை பெரிதும் உதவுகிறது.