எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு 2026 முதல் மனித மூளையில் சிப் பொருத்தும் புரட்சி

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு முதல் மூளை-கணினி இடைமுக சிப்களை பெரிய அளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. முடக்குவாதம் மற்றும் தண்டுவட பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் எண்ணங்கள் மூலமாகவே கணினி மற்றும் இயந்திரங்களைக் கட்டுப்படுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவும். 2024 இல் மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்குக் கொண்டு செல்ல மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த சிப் பொருத்தும் அறுவை சிகிச்சை முறையை முழுமையாக தானியங்கி மயமாக்க நியூராலிங்க் திட்டமிட்டுள்ளது. மூளையின் வெளிப்புறப் படலமான ‘டியூரா’ வழியாக இந்தச் சிப்பின் இழைகள் செலுத்தப்படும், இவற்றை மீண்டும் அகற்றத் தேவையில்லை. இந்தத் தானியங்கி அறுவை சிகிச்சை முறை சிக்கலான இம்ப்ளான்ட் நடைமுறையை எளிதாக்கி, நோயாளிகளுக்கு விரைவான தீர்வை வழங்கும். இதன் மூலம் தீவிர உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் டிஜிட்டல் உலகில் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.