உலகில் மொத்தம் எத்தனை ஆறுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா
December 28, 2025

போட்டித் தேர்வுகளில் பொது அறிவு வினாக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் உலகில் உள்ள மொத்த நதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குடிநீர், போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி என மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் ஆறுகள் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளன.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் சர்வே அறிக்கையின்படி உலகில் சுமார் 165 பெரிய ஆறுகள் உள்ளன. இருப்பினும் கிளை ஆறுகள் மற்றும் சிறிய நீரோடைகளை கணக்கில் கொண்டால் உலகில் மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமான ஆறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வரையறையைப் பொறுத்தே இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.