உங்கள் சிறுநீரின் நிறம் சிறுநீரக செயலிழப்பை முன்கூட்டியே எச்சரிக்கிறதா என்று உடனே சரிபார்க்கவும்

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். ஆனால் அடர் மஞ்சள் நிறம் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை குறிக்கிறது. சிறுநீரில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் தென்பட்டால் அது சிறுநீரகக் கல் அல்லது கடுமையான தொற்றின் எச்சரிக்கையாக இருக்கலாம் என்பதால் கவனம் தேவை.
சிறுநீரில் அதிக நுரை வருவது புரதக் கசிவு மற்றும் சிறுநீரக பாதிப்பைக் குறிக்கும். போதிய அளவு தண்ணீர் குடித்தும் சிறுநீர் குறைவாக வெளியேறினால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிறுநீரகத்தைப் பாதுகாக்க அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, சீரான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகும்.