ஈரான் எல்லையில் அமெரிக்காவின் அதிரடி மூவ் சீனாவின் செயற்கைக்கோள் படங்களால் அம்பலம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் திரிப்போலி’ போர்க்கப்பல் வளைகுடா பகுதியை நோக்கி நகர்வதை சீன செயற்கைக்கோள்கள் கண்டறிந்துள்ளன. இந்த அதிநவீன கப்பல் தரைவழித் தாக்குதலுக்குப் பெயர் பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் நிலப்பரப்பில் ஊடுருவித் தாக்கத் தயாராக உள்ளனர். வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரைவழிப் போருக்கும் அமெரிக்கா ஆயத்தமாகி வருவதை இது உறுதிப்படுத்துகிறது.
மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த மோதலில் இரு தரப்பிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்கா இந்தப் போரை விரைந்து முடிக்கத் திட்டமிடுகிறது. ஏற்கனவே பல போர்க்கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நகர்வு போரின் போக்கை மாற்றும் எனக் கருதப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளதோடு உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.