இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் விடுத்த கடும் எச்சரிக்கையினால் உலகளவில் பரபரப்பு

இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் விடுத்த கடும் எச்சரிக்கையினால் உலகளவில் பரபரப்பு

மத்திய கிழக்கு போர் சூழலில் தங்களை கத்தார் என்று நினைத்து பலவீனமாக எடை போட வேண்டாம் என இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு தூதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தான் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 15 அம்ச கோரிக்கைகளை ஈரான் பரிசீலித்து வருகிறது. இரு நாடுகளும் சம்மதித்தால் இஸ்லாமாபாத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *