இருபது ஆண்டுகளாக உலகையே கட்டிப்போட்ட ராஜஸ்தான் பெண்ணின் புலி போன்ற கண்கள்
February 14, 2026

ராஜஸ்தானின் புஷ்கர் மேளாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட சிறுமி பப்பு தேவியின் கண்கள் இன்றும் உலகப் புகழ்பெற்றவை. புலி போன்ற கூர்மையான மஞ்சள் மற்றும் பச்சை நிற கண்கள் கொண்ட அந்தப் புகைப்படம் ராஜஸ்தான் சுற்றுலாவின் அடையாளமாக மாறியது.
தற்போது முப்பது வயதைக் கடந்த பப்பு தேவிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் இருவருக்குத் தாயைப் போன்றே அபூர்வமான கண்கள் பாரம்பரியமாக கிடைத்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் இது செயற்கை லென்ஸ் என்று கருதினாலும் இது இயற்கையானது என்றும் சுற்றுலாப் பயணிகளுக்காகவே தாங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதாகவும் அவர் கூறுகிறார்.