இந்திய எல்லைகளில் பலத்த பாதுகாப்பு ஊடுருவலை தடுக்க மத்திய அரசு அதிரடி

இந்திய எல்லைகளில் பலத்த பாதுகாப்பு ஊடுருவலை தடுக்க மத்திய அரசு அதிரடி

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 93 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் முள்வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின்படி, மொத்தமுள்ள 2,289 கிமீ தூரத்தில் 2,135 கிமீ பகுதி இப்போது முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்திய-வங்கதேச எல்லையில் சுமார் 79 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. ஊடுருவல் மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம், நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *