இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: 8-வது ஆசிய கோப்பை மகுடத்தை சூடுமா இந்திய இளம் படை?
December 21, 2025

யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆயுஷ் ம्हाத்ரே தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி அபாரமாக முன்னேறியது. ஏற்கனவே குரூப் சுற்றில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் இந்தியா இன்று 8-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
நேருக்கு நேர் மோதலில் 7 போட்டிகளில் இந்தியா 4 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வென்றுள்ளன. இப்போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி லிவ் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.