இந்தியா – பாகிஸ்தான் மகா யுத்தம்: கோப்பையை வெல்லப்போகும் இந்தியாவின் அந்த 5 நட்சத்திர வீரர்கள் யார்?

துபாய் ஐசிசி அகாடமி மைதானத்தில் இன்று நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில், குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்திய பலத்துடன் இந்தியா மகுடம் சூடத் துடிக்கிறது.
பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அதிக ரன்கள் குவித்த அபிக்யான் குண்டு ஆகியோர் இந்தியாவின் பெரும் பலமாக உள்ளனர். ஆரோன் ஜார்ஜ் மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்க, பந்துவீச்சில் தீபேஷ் தேவேந்திரன் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக ஏற்கனவே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபேஷ் உட்பட இந்த 5 வீரர்கள் இன்று வெற்றியைத் தீர்மானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.