இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை

வர்த்தக விதிகளை மீறியதாக இந்தியா, சீனா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 16 நாடுகளின் மீது டிரம்ப் நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களைச் சந்தையில் குவித்து சர்வதேச வர்த்தக சமநிலையை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு பெரும் வர்த்தக வரி விதிக்கப்படும். உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்த வரி விதிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.