இந்தியாவின் அதிரடி வர்த்தக முடிவால் முடங்கும் வங்கதேச சணல் தொழில்

இந்தியாவின் அதிரடி வர்த்தக முடிவால் முடங்கும் வங்கதேச சணல் தொழில்

இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா சணலை வங்கதேசம் நிறுத்தியதை அடுத்து, வங்கதேசத்திலிருந்து வரும் சணல் தயாரிப்புகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. குறைந்த விலையில் தரமற்ற பொருட்களை இந்திய சந்தையில் குவித்து உள்நாட்டு உற்பத்தியை வங்கதேசம் பாதிக்க செய்ததே இதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் இந்த பதிலடி நடவடிக்கையால் வங்கதேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் சணல் தொழில் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சணல் விதை இறக்குமதிக்கு இந்தியாவையே நம்பியுள்ள வங்கதேசம், தற்போது இந்தியா எடுத்துள்ள இந்த வர்த்தக முடிவால் திணறி வருகிறது. இதனால் இந்திய ஆலைகளில் உற்பத்தி செலவு அதிகரித்தாலும், நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தகப் போர் வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *