இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் அதிரடி ராஜினாமா மற்றும் பொறுப்பை ஏற்றார் ராகுல் பாட்டியா

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் அதிரடி ராஜினாமா மற்றும் பொறுப்பை ஏற்றார் ராகுல் பாட்டியா

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் சிஇஓ பதவியிலிருந்து பீட்டர் எல்பர்ஸ் விலகியுள்ளார். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட விமான சேவை குளறுபடிகள் மற்றும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய சிஇஓ நியமிக்கப்படும் வரை நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராகுல் பாட்டியா விமான சேவையின் தினசரி செயல்பாடுகளை கவனிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 இல் பொறுப்பேற்ற எல்பர்ஸ் காலத்தில் சர்வதேச விரிவாக்கம் நடந்தாலும் டிசம்பர் மாத நெருக்கடி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. விமானிகள் பணி ஒதுக்கீடு குளறுபடியால் டிஜிசிஏ இண்டிகோவிற்கு 22.20 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தற்போது பொறுப்பை ஏற்றுள்ள ராகுல் பாட்டியா ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கடந்த கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட்டு நிறுவனத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *