ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க நாளை கடைசி நாள் உடனே இந்த எளிய முறையில் சரிபார்க்கவும்

ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025-டன் முடிவடைகிறது. ஜனவரி 1, 2026 முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாததாகிவிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செய்தல், வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட்டு இணைப்பின் நிலையை எளிதாக அறியலாம். இணைய வசதி இல்லாதவர்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி விவரங்களைப் பெறலாம். நாளைக்குள் இணைக்காவிட்டால், பான் கார்டை மீண்டும் செயல்படுத்த 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு அதற்கு 30 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்.