ஆண்டுத் தேர்வு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்

ஆண்டுத் தேர்வு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு நெருங்கும் நிலையில், வினாத்தாள்களைப் பெறுவதற்கான முக்கிய நெறிமுறைகளைத் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வினாத்தாள்கள் வழங்கப்படும். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வினாத்தாள்களைத் தேர்வு நடக்கும் முதல் நாள் காலை 9 மணி முதல் எமிஸ் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த நடைமுறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால அட்டவணைப்படி தேர்வுகளைத் துல்லியமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *