அமெரிக்க டாலர் வரலாற்றில் முதல்முறையாக நோட்டுகளில் இடம்பெறுகிறது அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து

அமெரிக்க டாலர் வரலாற்றில் முதல்முறையாக நோட்டுகளில் இடம்பெறுகிறது அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அந்நாட்டு கரன்சி நோட்டுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 165 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை மாற்றி, தற்போது பதவியில் இருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து டாலர் நோட்டுகளில் அச்சிடப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரவுள்ள 100 டாலர் நோட்டுகளில் அதிபர் ட்ரம்ப் மற்றும் நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகியோரின் கையெழுத்துகள் இடம்பெறும் என்று கருவூலத் துறை அறிவித்துள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் 24 கேரட் தங்கத்திலான சிறப்பு நினைவு நாணயம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது. அதில் அதிபர் ட்ரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். பொதுவாகச் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும், இதனை ஒரு சிறப்பு நினைவுச் சின்னமாக அமெரிக்க அரசு கருதுகிறது. அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *