அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பேராசிரியரால் நேர்ந்த பாலியல் தொல்லை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்
March 27, 2026

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரை ஏற்று காவல்துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அமைச்சரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள அவர், பல்கலைக்கழக பாலியல் புகார் குழுவின் (PoSH) செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகளிடமும் ரகசிய விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.