ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவிற்கு வந்த வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி மூன்று மாலுமிகள் மாயமானார்கள்
March 12, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த ‘மயூரி நாரி’ என்ற வணிகக் கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. கப்பலில் இருந்த 26 மாலுமிகளில் 23 பேர் ஓமன் மற்றும் தாய்லாந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 28 முதல் ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், ஐஆர்ஜிசி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.