வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பக்தர் திடீர் மரணம்
March 9, 2026

கோவையைச் சேர்ந்த ஹரிதாஸ் என்ற 48 வயது தங்கப்பட்டறை தொழிலாளி, தனது நண்பருடன் வெள்ளியங்கிரி மலை ஏறியபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். முதல் மலையிலேயே அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், வனத்துறையினர் அவரை மீட்டு அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவக்குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.