வெப்பிங் பழக்கத்தால் 21 வயதில் நுரையீரல் புற்றுநோய் எக்ஸ்ரே முடிவை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள்

இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த கெல்லி போடா என்ற 21 வயது இளம் பெண், தனது 15 வயதிலிருந்தே மின்-சிகரெட் அல்லது வெப்பிங் பழக்கத்திற்கு அடிமையானார். ஆரம்பத்தில் சாதாரண இருமல் மற்றும் சளியுடன் தொடங்கிய பாதிப்பை மருத்துவர்கள் அலட்சியப்படுத்தினர். ஆனால் இருமலில் இரத்தம் வரத் தொடங்கியபோது செய்யப்பட்ட எக்ஸ்ரே மற்றும் ஏழு பயாப்ஸி சோதனைகளின் முடிவில் அவருக்கு மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதியானது.
இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்ட கெல்லிக்கு அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. கீமோதெரபியின் கடும் வலியையும் உடல்நலப் பாதிப்புகளையும் சந்தித்த அவர், தற்போது இந்த பழக்கத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வேடிக்கையாகத் தொடங்கும் இந்த பழக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு கெல்லியின் கதையே ஒரு சாட்சி.