விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாப உயிரிழப்பு

விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாப உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வாலிபால் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் எட்டாம் வகுப்பு மாணவன் செல்வம் உயிரிழந்தார். சக மாணவர் பாரதி வீசிய பந்து தலையில் பட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. வீட்டிற்குச் சென்ற செல்வத்திற்கு திடீர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனின் மரணத்திற்கு அடிதடி காரணமா அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் மற்றும் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *