விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற வாழ்வாதாரமான டாக்ஸியை விற்ற டிரைவர் அந்த பெண் செய்த கைமாறு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற வாழ்வாதாரமான டாக்ஸியை விற்ற டிரைவர் அந்த பெண் செய்த கைமாறு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ராஜ்வீர், சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆசிமா என்ற பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அறுவை சிகிச்சைக்குத் தேவையான இரண்டு லட்ச ரூபாயை திரட்ட வழியின்றி, தனது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான புதிய டாக்ஸியை விற்று அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். ராஜ்வீரின் இந்த மனிதநேயம் அந்தப் பெண்ணிற்கு மறுவாழ்வு அளித்தது.

முழுமையாக குணமடைந்த ஆசிமா, தனது பட்டமளிப்பு விழாவிற்கு ராஜ்வீரை கௌரவ விருந்தினராக அழைத்தார். பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஆசிமா, மேடையில் தனது உயிரைக் காத்த ராஜ்வீரை ‘சகோதரன்’ என்று அழைத்து அந்த பதக்கத்தை அவருக்கு அர்ப்பணித்தார். மேலும், ராஜ்வீருக்கு ஒரு புதிய டாக்ஸியை பரிசாக வழங்கிய ஆசிமா, அவருடனேயே தங்கி குடும்பத்தில் ஒருவராக மாறினார். இக்கட்டான சூழலில் ஒருவருக்கு உதவும் பண்பிற்கு இந்த நிகழ்வு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *