விண்வெளியில் விந்தை கேலக்ஸியை விட்டு வெளியேறி அதிவேகமாக பாயும் ராட்சத கருந்துளை

விண்வெளியில் விந்தை கேலக்ஸியை விட்டு வெளியேறி அதிவேகமாக பாயும் ராட்சத கருந்துளை

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி, விண்வெளியில் ஒரு மிரட்டலான நிகழ்வைக் கண்டறிந்துள்ளது. சுமார் 8.8 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ‘காஸ்மிக் அவுல்’ விண்மீன் மண்டலத்திலிருந்து ஒரு ராட்சத கருந்துளை (Black Hole) தூக்கி எறியப்பட்டு, தற்போது விண்வெளியில் தனியாகப் பயணம் செய்து வருகிறது. விண்மீன் மண்டலங்கள் ஒன்றிணையும் போது ஏற்படும் ஈர்ப்பு விசை மோதலால் இது நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த கருந்துளை செல்லும் பாதையில் சுமார் 2 லட்சம் ஒளியாண்டுகள் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்ட வால் போன்ற கோட்டை உருவாக்கியுள்ளது. இது பயணிக்கும் வேகத்தில் விண்வெளி வாயுக்கள் அழுத்தப்பட்டு, அந்தப் பாதையில் ஆயிரக்கணக்கான புதிய நட்சத்திரங்கள் உருவாகி வருகின்றன. அழிவின் அடையாளமாகக் கருதப்படும் கருந்துளை, புதிய நட்சத்திரங்களை உருவாக்கி வருவது வானியற்பியல் உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *