விஜய் கொடுத்த கிரீன் சிக்னல்? பவன் கல்யாணின் ‘இரண்டரை ஆண்டு முதல்வர்’ திட்டத்திற்கு ஈபிஎஸ் முட்டுக்கட்டை

தமிழக அரசியலில் திமுகவை வீழ்த்த அமித்ஷா மற்றும் பவன் கல்யாண் மூலமாக நடிகர் விஜய்க்கு ஒரு மெகா ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டணி ஆட்சி அமைந்தால் முதல் இரண்டரை ஆண்டுகள் விஜய்யும், அடுத்த பாதியில் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. இந்த வியூகத்திற்கு நடிகர் விஜய் தரப்பில் இருந்து சாதகமான பதில் வந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தத் திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பது கட்சியின் பாரம்பரியத்திற்கு செய்யும் துரோகம் என்று கருதும் அவர், தானே முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறார். விஜய்யின் சம்மதமும் ஈபிஎஸ்ஸின் பிடிவாதமும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தியுள்ளதால், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.