வாட்ஸ்அப் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க இனி ஒரு கிளிக் போதும், உங்கள் தகவல்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்

வாட்ஸ்அப் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க இனி ஒரு கிளிக் போதும், உங்கள் தகவல்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்

செய்தி பிரிவு : ஆன்லைன் மோசடி மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வாட்ஸ்அப் ‘ஸ்ட்ரிக்ட் அக்கவுண்ட் செட்டிங்ஸ்’ (Strict Account Settings) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் தெரியாத எண்களில் இருந்து வரும் மால்வேர் மற்றும் வைரஸ் கோப்புகள் தானாகவே தடுக்கப்படும். உங்கள் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட தரவுகளைத் திருட முயலும் ஹேக்கர்களின் சதித்திட்டத்தை இந்த அம்சம் முறியடிக்கும்.

இந்த செட்டிங்ஸை ஆன் செய்தால், டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் தானாகவே செயல்படத் தொடங்கும். உங்கள் ப்ரொஃபைல் படம் மற்றும் ஆன்லைன் ஸ்டேட்டஸ் தெரியாத நபர்களுக்கு மறைக்கப்படும், மேலும் தேவையற்ற அழைப்புகள் தானாகவே சைலண்ட் மோடுக்கு மாறிவிடும். சாதாரண மக்கள் மற்றும் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த புதிய வசதி அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *