வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க அவசர உதவி எண்கள் வெளியீடு
March 14, 2026

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் 595 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க சென்னை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக ஈரான், துபாய், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் அவசர உதவி எண்கள் மற்றும் வாட்ஸ்-அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையை +91 1800 309 3793 என்ற கட்டணமில்லா எண்ணிலும், எழிலகத்தில் உள்ள அலுவலகத்தை நேரிலும் அணுகித் தேவையான உதவிகளைப் பெற்று பாதுகாப்பாகத் தாயகம் திரும்பலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.