வங்கதேச முன்னாள் பிரதமர் காலேதா ஜியா காலமானார்

வங்கதேச முன்னாள் பிரதமர் காலேதா ஜியா காலமானார்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் பிஎன்பி கட்சித் தலைவருமான காலேதா ஜியா தனது 80வது வயதில் காலமானார். கடந்த 20 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், நீண்ட கால உடல்நலக் குறைவால் இன்று உயிர் துறந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் என்பதை பிஎன்பி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

1991 முதல் 1996 மற்றும் 2001 முதல் 2006 வரை என இரண்டு முறை பிரதமராகப் பதவி வகித்தவர் காலேதா ஜியா. முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான இவர், பல ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு சமீபத்தில்தான் விடுதலையானார். இவருடைய மறைவு வங்கதேச அரசியலில் ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *