லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்வு
March 11, 2026

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த கோரமான தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 570 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
பலியானவர்களில் 439 ஆண்கள், 45 பெண்கள் மற்றும் 86 குழந்தைகள் அடங்குவர் என்பது வேதனையான விஷயமாகும். மேலும் 14 சுகாதாரப் பணியாளர்களும் இந்த மோதலில் உயிரிழந்துள்ளனர். ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவும் இந்த கடும் போர் பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.