ரூபாய் 2100 சிலிண்டர் 4000 ரூபாய்க்கு விற்பனை செய்த கேஸ் ஏஜென்சிக்கு அதிரடி சீல்

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஸ்ரீ சத்குரு கேஸ் ஏஜென்சி, வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பயன்படுத்தி, 2,100 ரூபாய் மதிப்புள்ள சிலிண்டரை 4,000 ரூபாய்க்கு விற்றது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக ஏஜென்சி உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்றது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி வணிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.