ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடையா? ட்ரம்ப் கருத்துக்கு மாஸ்கோ பதிலடி, சாமானியர்கள் பாதிப்பா?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடையா? ட்ரம்ப் கருத்துக்கு மாஸ்கோ பதிலடி, சாமானியர்கள் பாதிப்பா?

நியூஸ் டெஸ்க் : ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது பொதுமக்களிடையே எரிபொருள் விலை உயர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து இந்தியா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என மாஸ்கோ தெரிவித்துள்ளது. மலிவு விலை ரஷ்ய எண்ணெய் நிறுத்தப்பட்டால், அது நேரடியாக சாமானிய மக்களின் பாக்கெட்டை பாதிக்கும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்காக ரஷ்ய எண்ணெயை இந்தியா தவிர்த்தால், போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு ரஷ்யாவுடனான உறவு மிக முக்கியமானது. இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் நாட்டின் பணவீக்கத்தை நேரடியாகத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *