மேற்கு வங்கத்திற்கு செல்லும் ஆர் என் ரவி மற்றும் தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநர் பதவியேற்பு
March 11, 2026

தமிழக ஆளுநராக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆர் என் ரவிக்கு காவல்துறை சார்பில் இன்று அதிகாரப்பூர்வ வழியனுப்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்க ஆளுநராக நாளை பதவியேற்க உள்ள அவர் இன்று டெல்லி புறப்பட்டார். தமிழக மக்களின் பண்பாடு மற்றும் தமிழ் மொழி மீதான தனது பற்றை வெளிப்படுத்திய அவர் இங்கு கழித்த காலத்தை தனது வாழ்வின் பொற்காலம் என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆர் என் ரவி விடைபெற்றதைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்க உள்ளார். நாளை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்கிறார். முன்னதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.