மெட்ரோ கட்டண உயர்வு: ஆதாரங்களுடன் முதல்வர் சித்தராமையாவை அதிரவைத்த தேஜஸ்வி சூர்யா!
February 7, 2026

பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்விற்கு மத்திய அரசுதான் காரணம் என முதல்வர் சித்தராமையா கூறியதற்கு, எம்பி தேஜஸ்வி சூர்யா ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். கட்டணத்தை நிர்ணயிக்கும் குழுவிற்கு மாநில அரசே பரிந்துரை செய்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான அரசு கடிதங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மாநில அரசின் நிதிச் சுமையைக் குறைக்கவே மெட்ரோ கட்டணத்தை உயர்த்த அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அழுத்தம் கொடுத்ததாக சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். பிப்ரவரி 9 முதல் அமலாகவுள்ள இந்த கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.