மூன்று மூட்டை கோதுமையை விற்று வாங்கிய டிக்கெட் வீணானது

மூன்று மூட்டை கோதுமையை விற்று வாங்கிய டிக்கெட் வீணானது

லக்னோவில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆடுகளத்தை பலமுறை ஆய்வு செய்த நடுவர்கள், போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு 9:25 மணிக்கு போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால் ஆவலுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

டிக்கெட் பணத்தை திரும்ப வழங்கக்கோரி ரசிகர்கள் பிசிசிஐ-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு ரசிகர் தான் மூன்று மூட்டை கோதுமையை விற்று டிக்கெட் வாங்கியதாக கண்ணீருடன் தெரிவித்தார். முதல்முறையாக மைதானத்திற்கு வந்த பல ரசிகர்கள், போட்டி நடக்காததால் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *