“முதல் இரவே முடிவு”: மனைவியின் வயிற்றில் தழும்பு.. கணவன் கண்டறிந்த அதிர்ச்சி உண்மை!

“முதல் இரவே முடிவு”: மனைவியின் வயிற்றில் தழும்பு.. கணவன் கண்டறிந்த அதிர்ச்சி உண்மை!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியில் ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணமான சில நாட்களிலேயே, கணவன் தனது மனைவியின் வயிற்றில் ஒரு தழும்பு இருப்பதைக் கவனித்தார். அது ஏதோ ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான அடையாளமாக அவருக்குத் தோன்றியது.

இது குறித்து மனைவியிடம் கேட்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். மனைவி ஏதோ மறைப்பதாகச் சந்தேகித்த கணவன், எப்படியாவது உண்மையை அறிய முடிவெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது மனைவியின் சொந்த ஊருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் அவரது மருத்துவ விவரங்களைக் கோரி விண்ணப்பித்தார். மருத்துவமனையிலிருந்து வந்த பதில் அவரை நிலைகுலையச் செய்தது. திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்தது மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதியானது.

தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி கணவன் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆரம்பத்திலேயே உண்மையை மறைத்தது தனக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இரு குடும்பங்களுக்கு இடையிலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *