மீன் சாப்பிடும்போது முள் குத்தும் பயம் இனி வேண்டாம் சீன விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு

மீன் சாப்பிடும்போது முள் குத்தும் பயம் இனி வேண்டாம் சீன விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு

செய்தி பிரிவு : மீன் பிரியர்களின் நீண்டகால கவலையை போக்கும் வகையில் சீன விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் எலும்புகள் இல்லாத ஒரு புதிய வகை மீனை உருவாக்கியுள்ளனர். சீனாவில் அதிகம் உட்கொள்ளப்படும் ‘கிபெல் கார்ப்’ வகை மீன்களில் பொதுவாக எண்பதுக்கும் மேற்பட்ட மெல்லிய முட்கள் காணப்படும். சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் அத்தகைய முட்கள் உருவாவதற்கு காரணமான சிஜிஆர்யுஎன்எக்ஸ்டுபி எனும் மரபணுவை கண்டறிந்துள்ளனர். பின்னர் ‘சிஆர்ஐஎஸ்பிஆர்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த மரபணுவை நீக்கி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த மரபணு மாற்றத்தினால் உருவான மீன்களில் தசைப்பகுதியில் காணப்படும் ஆபத்தான மெல்லிய முட்கள் எதுவும் இல்லை. மீனின் சுவையிலோ அல்லது அதன் ஆரோக்கியத்திலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அதன் முதுகெலும்பு பாதுகாப்பாக இருப்பதால் மீன் இயல்பாக வளரும் என்றும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு மீன் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களை முற்றிலுமாக தவிர்க்க உதவும் என்பதால் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *