திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் எதிர்கால தலைமுறை அழிந்துவிடும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை கடுமையாகச் சாடினார். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு என குற்றம் சாட்டினார். மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் தடையின்றி நடப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மது மற்றும் கஞ்சா கலாச்சாரத்தால் இளைஞர்களின் வாழ்வு சீரழிந்து வருவதாகக் கூறிய அன்புமணி, விவசாயிகள் தற்கொலை மற்றும் ஊழல் மலிந்த இந்த ஆட்சியை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என வலியுறுத்தினார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் அடையாளம் காணாமல் போய்விடும் என்றும், மாற்றத்தை ஏற்படுத்த என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்குமாறும் அவர் மக்களிடம் ஆவேசமாக வேண்டுகோள் விடுத்தார்.