மருமகளின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமனார் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 70 வயது விவசாயி ராஜேந்திரன் என்பவர் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பதறவைக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
விசாரணையில் ராஜேந்திரனின் மருமகளுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இருந்த கள்ளக்காதலை ராஜேந்திரன் எதிர்த்ததே இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இது தொடர்பாக மருமகள் மற்றும் மணிகண்டன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.