மனைவி குளிக்காததால் வீசும் துர்நாற்றம் விவாகரத்து கோரி கணவர் வினோத புகார்

மனைவி குளிக்காததால் வீசும் துர்நாற்றம் விவாகரத்து கோரி கணவர் வினோத புகார்

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் வினோதமான காரணம் ஒன்றிற்காக கணவர் விவாகரத்து கோரியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தனது மனைவி முறையாகக் குளிப்பதில்லை என்றும், அவர் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த காரணத்திற்காகவே தன்னால் அவருடன் வாழ முடியாது என மகளிர் பாதுகாப்பு மையத்தில் அவர் மனு அளித்துள்ளார்.

ஆனால், தன் மீதான இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் தன்னை கணவர் துன்புறுத்துவதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். தற்போது இவர்களுக்கு இடையே சமரசம் ஏற்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தனிநபர் சுகாதாரம் தொடர்பான இதுபோன்ற வினோதமான புகார்கள் கடந்த காலங்களிலும் நீதிமன்றங்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *