மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவனை 15 நாட்கள் வீதம் பகிர்ந்து கொண்ட இரு மனைவிகள்

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் குடும்ப நல ஆலோசனை மையம் ஒரு விசித்திரமான வழக்கை முடித்து வைத்துள்ளது. தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நபர் மீது புகார் எழுந்த நிலையில், இரு மனைவிகளும் அவருடனேயே வாழ பிடிவாதம் பிடித்தனர். இதனால் வேறு வழியின்றி அதிகாரிகள் அந்த நபரை இரு மனைவிகளுக்கும் சரிபாதியாகப் பகிர்ந்து வாழும் ஒரு வினோதமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர்.
இந்த முடிவின்படி அந்த நபர் தனது இரு மனைவிகளுக்கும் தனித்தனி வீடுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகளை வழங்க வேண்டும். மாதத்தின் முதல் 15 நாட்கள் முதல் மனைவியுடனும் அடுத்த 15 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் அவர் வசிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க மூன்று பேரிடமும் முறையாக சட்டப்பூர்வ உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.