மத்திய கிழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

மத்திய கிழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியாவிற்கு ஈரான் ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்ட குழப்பமான சூழலில் ஈரான் இந்த முக்கிய கடல் வழியை மூடியிருந்தது. இருப்பினும் இந்தியாவின் ராஜதந்திர முயற்சியால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் தடையின்றி செல்ல ஈரான் உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய இரண்டு இந்திய கப்பல்கள் ஏற்கனவே பாதுகாப்பாக தாயகம் நோக்கி புறப்பட்டுவிட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *