மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தேதிகள் மற்றும் முழு விபரங்கள் இதோ

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஏப்ரல் 26-இல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 27-இல் திக்கு விஜயமும் நடைபெற உள்ளன. இந்த ஆன்மீக நிகழ்வைக் காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ஆம் தேதி காலை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு மாசி வீதிகளில் பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் தீவிரமாகச் செய்து வரும் நிலையில், பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் தியான மண்டபத்தைத் திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.