மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் உட்பட 23 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரையும் விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இது தொடர்பாக அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களை விடுவித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சிபிஐ அதிகாரிக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐயின் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அமலாக்கத்துறை தொடர்பான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.