போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலில் அறிமுகமான வினோத பாம் ஷெல்டர் டேட்டிங் ஆப்
March 11, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் அரசு ‘பாம் ஷெல்டர் டேட்டிங் ஆப்’ எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதலின் போது பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் புகுந்துள்ள தனிமையில் இருக்கும் நபர்களை ஒன்றிணைப்பதே இந்த வினோத செயலியின் முக்கிய நோக்கமாகும். இது தற்போது உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த செயலியில் பாதுகாப்பாக குளிப்பதற்கான நேரத்தைக் கணிக்கும் வசதி மற்றும் தூக்கத்தின் அளவைக் கண்காணிக்கும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய முயற்சியை இஸ்ரேல் அரசு ஒரு ஆக்கபூர்வமான கண்டுபிடிப்பாகக் கூறினாலும், இணையவாசிகள் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போரின் கொடூரமான சூழலில் இத்தகைய பொழுதுபோக்கு செயலி தேவையா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.