பொள்ளாச்சியில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்திய போதை ஓட்டுநர் சாலையோரத்திலேயே குறட்டை விட்டு தூங்கிய அதிர்ச்சி

பொள்ளாச்சியில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்திய போதை ஓட்டுநர் சாலையோரத்திலேயே குறட்டை விட்டு தூங்கிய அதிர்ச்சி

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்த ரமேஷ்குமார் என்பவர், கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் கார் தலைகீழாக கவிழ்ந்த போதிலும், நல்வாய்ப்பாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து நடந்த பதற்றமே இல்லாமல், காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர் சாலையோரத்திலேயே ஆழ்ந்து உறங்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த போலீசார் காரை மீட்டதுடன், போதை குறையாமல் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *