பெற்ற தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன், ஆத்திரத்தில் மகனை தீர்த்துக்கட்டிய தாய்

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஷ்யாமிவாலா கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 56 வயதான தாய் ஒருவர் தனது 32 வயது மகன் அசோக்கை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில், மதுவுக்கு அடிமையான அசோக் தொடர்ந்து தனது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு, போதையில் இருந்த அசோக் மீண்டும் தாயிடம் தவறாக நடக்க முயன்றபோது, பொறுமை இழந்த தாய் தற்காப்பிற்காக அவரைத் தாக்கியதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் கொள்ளையர்கள் புகுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடிய தாய், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். சமூக அவமானத்திற்கு பயந்து இத்தனை காலம் அமைதியாக இருந்ததாகவும், அன்றைய இரவு எல்லையை மீறியதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். கொலையுண்டு போன மகனின் ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் ஆயுதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்தத் தாய் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.