பெரம்பூரில் விஜய்க்காக அதிமுக செய்த தியாகம் பின்னணியில் இருக்கும் ரகசிய சதி அம்பலம்
March 27, 2026

தமிழக அரசியல் களத்தில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி தற்பொழுது விவாதப் பொருளாகியுள்ளது. அங்கு செல்வாக்கு மிக்க அதிமுக வேட்பாளர் சேவியரை நிறுத்துவதற்குப் பதிலாக, எவ்வித கட்டமைப்பும் இல்லாத பாமகவிற்கு அந்த தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. இது விஜய்யின் வெற்றியை எளிதாக்க ஆதவ் அர்ஜுனா திரைமறைவில் நடத்திய அரசியல் நாடகம் என கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த முடிவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சேவியருக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் மற்றும் உழைக்கும் மக்களின் வாக்குகள் விஜய்க்கு சாதகமாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொண்டர்களின் குமுறலை அடுத்து, தலைமை மீண்டும் பெரம்பூரை தன்வசப்படுத்தி சேவியரை களம் இறக்குமா அல்லது விஜய்க்கு வழிவிடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.