புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிக்கல் உணவு டெலிவரி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிக்கல் உணவு டெலிவரி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

டிசம்பர் 31 அன்று ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் பிளிங்கிட் போன்ற தளங்களின் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. போதிய வருமானம் இன்மை மற்றும் 10 நிமிட டெலிவரி முறையால் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து டெலிவரி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் புத்தாண்டு அன்று உணவு மற்றும் மளிகைப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது கடினமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை காலங்களில் அதிக வேலைப்பளு இருந்தாலும் வருமானம் குறைந்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்து நெரிசலில் விரைவாக டெலிவரி செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முறையான சமூக பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த போராட்டம், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *