பாராளுமன்றத்தில் பிரதமர் இல்லை நாட்டில் சிலிண்டர் இல்லை ராகுல் காந்தி கடும் தாக்கு

ஈரான் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு வெளியே தீவிர போராட்டத்தில் ஈடுபட்டன. ராகுல் காந்தி தலைமையில் திரண்ட எம்.பி.க்கள், எரிசக்தி பாதுகாப்பில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினர். பிரதமர் பாராளுமன்றத்தில் காணவில்லை என்றும், சிலிண்டர் நாட்டிலிருந்து காணவில்லை என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தி, சிலிண்டர் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.