பாதுகாப்பு பட்ஜெட்டில் மோடி அரசின் அதிரடி உயர்வு நாட்டின் பாதுகாப்பு இனி புதிய உச்சத்தில்
February 1, 2026

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு 7.85 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இதனை அறிவித்தார். இது கடந்த ஆண்டை விட 1.04 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடு ஆகும், இது சதவீத அடிப்படையில் 21 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சியாகும்.
ராணுவத்தை நவீனமயமாக்குவதற்காக மட்டும் 2.19 லட்சம் கோடி ரூபாய் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்த பட்ஜெட் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் பாதுகாப்புத்துறையில் இந்தியா தற்சார்பு அடைவதோடு ராணுவ வலிமையும் பன்மடங்கு அதிகரிக்கும்.